ஜே.என்.யூ., மாணவர் தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜே.என்.யூ., மாணவர் தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தேர்தலில், ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி, வெற்றி பெற்றது. ஜே.என்.யூ., எனப்படும், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்க தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், 5,000 மாணவர்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில், ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி, ஆர்.எஸ்.எஸ்., மாணவர் அமைப்பான, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத், காங்கிரஸ் மாணவர் சங்கம் ஆகியவை போட்டியிட்டன.தேர்தல் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.மாணவர் சங்க தலைவராக, சாய் பாலாஜி, துணை தலைவராக சரிகா சவுத்ரி, பொதுச் செயலாளராக அஜாஜ் அகமது, இணை செயலாளராக, அமுதா வெற்றி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201813:56:16 IST Report Abuse
Bhaskaran குற்றாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் மழைபெய்வதைப்போல் உடனே நம் காம்ரேடுகள் வெற்றிவிழா கொண்டாடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-செப்-201811:17:45 IST Report Abuse
Cheran Perumal வெட்கக்கேடான வெற்றி. ஏபிவிபி பெயரில் அசைவ உணவை தடைசெய்வோம், குட்டை ஆடைகளை தடைசெய்வோம் என்று போர்ஜரி போஸ்டர் ஒட்டி அதை எல்லா ஆங்கில மீடியாவிலும் வெளிவரச்செய்தனர் கம்மிகள். அது எங்கள் போஸ்டர் அல்ல, என்ற ஏபிவிபி யின் விளக்கத்தையும் புறக்கணித்தனர் மீடியா. மேலும் முக்கிய ஏபிவிபி தலைவர்களை அடித்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்தனர் கம்மிகள். இப்படி ஜனநாயகத்துக்கு புறம்பான முறைகளில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்டுகளை பாராட்டும் வெட்கக்கேடான செயலையும் மீடியாக்கள் செய்வது இனி அடிதடி, அராஜக முறைகளில்தான் தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற எண்ணத்தையும்.கட்சிகளிடையே ஏற்படுத்தி விடும். மற்ற எல்லோருக்கும் சகிப்புத்தன்மையை போதிக்கும் கம்யூனிஸ்டுகள் எப்போதுமே அராஜகம் மூலமாகத்தான் ஜனநாயகத்தை எதிர்கொள்கிறார்கள். அதை கண்டிக்கும் தைரியம் இங்கு எவருக்குமே இல்லாதது எல்லாவற்றையும்விட வெட்கக்கேடானது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X