ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்கள் : நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளுக்கு தரமான பொருட்கள் : நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தல்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: உணவுப்பொருட்களை 50 கிலோ மூடைகளாக சமச்சீர் செய்து சரியான எடையில் ரேஷன்கடைகளுக்கு அனுப்ப வேண்டும். தரமான உணவுப்பொருட்களையே அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர்களுக்கு நிர்வாக இயக்குனர் சுதாதேவி அறிவுறுத்தியுள்ளார்.ரேஷன்கடைகளில் எடை குறைவை தடுக்க நுகர்பொருள் வாணிப கழக குடோவுன்களிலிருந்து சரியான எடையில் வழங்க வேண்டும் என அரசை ரேஷன்கடை பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த பொது விநியோக திட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழக குடோவுன்களிலிருந்து உணவுப்பொருட்களை 50 கிலோ மூடைகளாக சமச்சீர் செய்து, அந்தந்த மாதத்திற்குரிய வண்ண நுாலினால் தையலிட்டு ரேஷன்கடைகளுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.இதுகுறித்து நிர்வாக இயக்குனர் மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாவது:நுகர்பொருள் வாணிப கழக குடோவுன்களிலிருந்து உணவுப்பொருட்களை ஐம்பது கிலோ மூடைகளாக்கி காலிக்கோணி எடையுடன் சேர்த்து 50.665 கிலோ எடையுடன் ரேஷன் கடைகளுக்கு வழங்கிட வேண்டும். உணவுப் பொருட்களை அனுப்புவதற்கு முதல் நாளே சமச்சீர் செய்து சரியான எடையில் வைத்திருக்க வேண்டும். தேவையான அளவில் பொருட்கள் இருப்புள்ளதா என கண்காணிக்க வேண்டும். பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்து போராட்டம் போன்ற செய்திகளுக்கு இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும். மாத இறுதியில் அதிக பொருட்களை அனுப்பினால் முறைகேடுளுக்கு வழிவகுக்கும். நகர்வு அட்டவணைப்படியும், ஒதுக்கீட்டின்படியும், வழித்தட பட்டியலின்படியும் உரிய காலத்திற்குள் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டும். இந்நடைமுறை சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மண்டல மேலாளர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தரமான உணவுப் பொருட்களையே அனுப்ப வேண்டும். பொருட்கள் முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பொருட்களை எடையிட்டு லாரியில் ஏற்றும் போது கீழே சிந்தும் பொருட்களை சேகரித்து அதே லாரிகளில் அனுப்புவதை குடோவுன் பொறுப்பாளர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201813:57:37 IST Report Abuse
Bhaskaran எல்லா உத்தரவுகளும் வாய்மொழியுடன்சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X