இறந்தவரை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்தவரை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்;ராமநாதபுரம் பி.கொடிக்குளம் அருகே இறந்தவரை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சித்தனர். டாக்டர் புகாரால் உடல் மீட்கப்பட்டது.
நயினார்கோவில் அருகே பி,கொடிக்குளத்தைசேர்ந்த ரேஷன் கடை பணியாளர் பாஸ்கரன்,42, இவர் நேற்று ஊரணிக்கு சென்ற போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கினார். அருகிலிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். உடலை பிணவறைக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால் உறவினர்கள் ஆட்டோவில் பாஸ்கரன் உடலை எடுத்து சென்று, போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயற்சித்தனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ஞானகுமார் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் பி.கொடிக்குளத்தில் பாஸ்கரன் உடலை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு வந்தனர். பின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X