420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

420 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: அனல்மின் நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறையால், 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர், பழைய அனல் மின் நிலையத்தில், 1 அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு, தினமும், 13 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. சில நாட்களாக, தினமும் இரு சரக்கு ரயில்களில், 7,000 டன் நிலக்கரி மட்டுமே, அனல்மின் நிலையத்துக்கு வருகிறது.அதன்மூலம், முழுமையாக உற்பத்தி செய்ய முடியாது. இருப்பு நிலக்கரி அளவும், வெகுவாக குறைந்து விட்டது. அனல்மின் நிலையத்தில், நேற்று முன்தினம், 3வது அலகில், உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று, 2வது அலகிலும் நிறுத்தப்பட்டது. 420 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X