அதிகாரிகள் பேச்சை கேட்டால் ஆட்சி நடத்த முடியாது : முனுசாமி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் பேச்சை கேட்டால் ஆட்சி நடத்த முடியாது : முனுசாமி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: ''அதிகாரிகளின் பேச்சைக் கேட்டால், யாராலும் ஆட்சி நடத்த முடியாது,'' என, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முனுசாமி பேசினார்.திருவண்ணாமலையில், அ.தி.மு.க., சார்பில், அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், முனுசாமி பேசியதாவது:-மாணவர்களுக்கு, ஜெ., அரசு இலவச லேப்டாப் வழங்குவதை பார்த்து, சில மாநிலங்களில், லேப்டாப் வழங்க முடிவு செய்தனர். அங்குள்ள அதிகாரிகள், இதை நம்மால் செய்ய முடியாது என்றதால், அதை கைவிட்டனர். அதிகாரிகள் சொல்வதை கேட்டால், யாராலும் ஆட்சி நடத்த முடியாது. ஜெ., சொல்வதை தான், அதிகாரிகள் கேட்டனர்.ரஜினி, கமல், விஷால், விஜய் போன்ற நடிகர்கள், முதல்வராகும் கனவுடன் உள்ளனர். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா இந்த இடத்துக்கு வர, கடுமையாக உழைத்துள்ளனர். தற்போதைய நடிகர்களால், என்ன செய்தாலும் அரசியலில் நிலைக்க முடியாது. சட்டசபையில், இரண்டு நிமிடங்கள் கூட முழுமையாக பேச முடியாத ஸ்டாலினால், எவ்வாறு, தி.மு.க., தலைவராக இருக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-செப்-201811:12:55 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பழனிசாமியை கிண்டல் செய்கிறாரோ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:31:45 IST Report Abuse
Bhaskaran அதிலும் தமிழ்நாட்டில் வரவர எதற்குமே தகுதியில்லாதவர்கள் நிறையபேர் அதிகாரிகளாக உள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201800:25:11 IST Report Abuse
ஆப்பு அதிகாரிகளின் பேச்சைக் கேட்டால் துட்டு அடிக்க முடியாது. எம்.ஜி.ஆர் பல்பொடிலேருந்து, அம்மா உப்பு , அம்மா லேப்டாப், டி.வி, கிரைண்டர்னு எல்லாத்துலேயும் கமிஷன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X