மன்னார் வளைகுடா பகுதியில் தூய்மை பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மன்னார் வளைகுடா பகுதியில் தூய்மை பணி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ராமநாதபுரம்;ராமநாதபுரம் மன்னார் வளைகுடா காப்பக பகுதியில் சீனியப்பா தர்கா பகுதியில் துாய்மை பணி மேற்கொண்டதில் 31 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டது.மதுரை காமராஜ் பல்கலையில் கடல் மற்றும் கடலோர ஆய்வுத்துறையின் சார்பில், மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள சீனியப்பா தர்கா கடற்கரைப்பகுதியில் துாய்மை பணியில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் மு.ஆனந்த் அனைவரையும் வரவேற்றார்.
காமராஜ் பல்கலை ஆற்றல்துறை தலைவர் கி.முத்துச்செழியன் பேசியதாவது: கடற்கரைப்பகுதியில் காணப்படும் திடக்கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தானது. மாணவர்கள் கடல் துாய்மை தினத்தில் இந்த திடக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தும் பழக்கத்தினை உறுதியுடன் மனதில் ஏற்க வேண்டும். வருங்காலங்களில் கடல் மற்றும் அது சார்ந்த பகுதிகளை துாய்மையாக பராமரிக்க உறுதி கொள்ளவேண்டும், என்றார்.
மத்திய கடல் வாழ் உயிரினங்களின் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஜெயக்குமார், அழகப்பா பல்கலை முனைவர் எஸ்.ரவிக்குமார், காமராஜ் பல்கலை முனைவர் சி.கோபிநாதன், கீழக்கரை செய்யது ஹமீதியா கல்லுாரி முதல்வர் ரஜபுதீன், முகமது சதக் ஹமீது கல்லுாரி முதல்வர் நாதிராபானு ஆகியோர் பேசினர். காமராஜ் பல்கலை கடல் மற்றும்கடலோர ஆய்வுத்துறை துறைத்தலைவர் சி.எம்.ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். துாய்மைப்பணியில் செய்தம்மாள், செய்யது ஹமீதியா, முகமது சதக் ஹமீது, தாசிம்பீவி அப்துல்காதர், சேதுபதி அரசு கல்லுாரி, அழகப்பா பல்கலை உயிரிய மருத்துவத்துறை மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 31 சதவீதம் பிளாஸ்டிக்கும், 21 சதவீத கண்ணாடி பாட்டில்களும் அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X