பனை மரம் வளர்ப்பில் இளைஞர்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பனை மரம் வளர்ப்பில் இளைஞர்கள் ஆர்வம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆர்.கே.பேட்டை:பனை விதைகளை சேகரித்து, அவற்றை நடும் பணியில், அம்மையார்குப்பம் இளைஞர்கள் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின், நாட்டு பசுக்களின் விலையும் அவற்றின் மதிப்பும் பன்மடங்கு கூடிவிட்டது. கலப்பு இல்லாத இயற்கையின் மீதான மக்களின் புரிதலே இதற்கு காரணம். அதே போல், பனைமரங்களின் சிறப்பு குறித்தும், தற்போது மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், பனை விதைகளை சேகரித்து, மலைப்பாதையில் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து, அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:பனை மரத்தின் வேர் முதல் குருத்தோலை வரை, அனைத்தும் மனித சமுதாயத்திற்கு பயனளிப்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளன. அவற்றை விதைத்தாலே போதும், எவ்வித பராமரிப்பும் இன்றி, தானே வளர்ந்து பயனளிக்க துவங்கிவிடும். நுங்கு, விசிறி, பதநீர், கருப்பட்டி என, எண்ணிலடங்காத பயன்கள் கிடைக்கின்றன.மேலும், பனை மரங்களின் வேர் பகுதியில், மணல் இடைவெளி அதிகம் என்பதால், நிலத்தடி நீர் வழித்தடமாகவும் விளங்குகிறது. அதனால் தான், ஏரிக்கரையோரம், பனை மரம் வரிசையாக நட்டு வைக்கப்பட்டு உள்ளன.ஏரிக்கரை முதல் கடைமடை வரை, நிலத்தடி மார்க்கமாக, வாய்க்கால் சச்சரவு இன்றி, தண்ணீர் கொண்டு செல்லும் அற்புத சூத்ரதாரி பனை. கடந்த கோடை காலத்தில், நுங்காக அறுவடை செய்யப்படாத பனங்காய்கள், தற்போது முதிர்ந்து, பழங்களாக உதிர்ந்து வருகின்றன. அவற்றை சேகரித்து, அம்மையார்குப்பம் மலைப்பகுதி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் நட்டு வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X