ரேஷன்கடைகள் நஷ்டத்திற்கு அரசு ரூ.460 கோடி மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன்கடைகள் நஷ்டத்திற்கு அரசு ரூ.460 கோடி மானியம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை;ரேஷன்கடைகள் நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு 460 கோடி ரூபாய் மானியம் வழங்கியதை தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் 4500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 300 தொடக்க நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகள், 110 தாலுகா வேளாண் கூட்டுறவு சங்கங்கள், 30 கூட்டுறவு பண்டகசாலைகள் பொது விநியோக திட்டத்தின் கீழ் 32 ஆயிரத்து 546 ரேஷன்கடைகள், 250 மண்ணெண்ணெய் பங்க்குகளை நடத்தி வருகின்றன. இவற்றில் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். பணியாளர்களுக்கு ஆண்டு சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, லாரிவாடகை உயர்வு போன்ற காரணங்களால் ஒரு ரேஷன் கடைகளுக்கு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது.
நஷ்டத்திற்கான மானியத்தை அரசு வழங்குகிறது. இந்த வகையில் கடந்தாண்டு வரை அரசு 951 கோடி ரூபாய் மானியம் வழங்க வேண்டும். மானியம் வழங்க பல்வேறு கூட்டுறவு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தின. அதை ஏற்று அரசு 460 கோடி மானியம் வழங்க உத்தரவிட்டதற்கு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொது செயலர் வெங்கடாசலபதி நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X