ஸ்டாலின் புகாருக்கு தமிழிசை பதிலடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் புகாருக்கு தமிழிசை பதிலடி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஸ்டாலின் புகாருக்கு  தமிழிசை பதிலடி

சென்னை: 'தமிழகத்திற்கு, மத்திய அரசு எதுவும் செய்யவில்லை' என்ற, தி.மு.க., தலைவர்ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு, தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்திரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.தி.மு.க., முப்பெரும் விழா, விழுப்புரத்தில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், பேசிய ஸ்டாலின், 'மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை' என, குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து, தமிழிசை சவுந்திரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்திற்கு, நான்கு ஆண்டுகளில், பா.ஜ., என்ன செய்தது எனஸ்டாலின் கேட்கிறார். மத்தியில் அவர்கள் ஆட்சி செய்த, 10 ஆண்டுகளில், தீராத மின்வெட்டு, காவிரி பிரச்னை, மீனவர் பிரச்னை, இலங்கை தமிழர்கள் பிரச்னை என்பதெல்லாம், அவர்கள், தமிழகத்திற்கு செய்த துரோக பட்டியல்.ஆனால், நான்கு ஆண்டுகளில், தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார். தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால், ஒன்றுமில்லை என, அறிவீர்கள். எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல, பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி; நீங்கள் ரெடியா.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Kanchipuram,இந்தியா
17-செப்-201820:39:03 IST Report Abuse
raja வாய்பேச்சில் கில்லாடி. முடியவில்லை என்றால் போலீசை கூப்பிட்டு ரகளை செய்துவிடலாம்
Rate this:
Share this comment
Cancel
Kirubakaran - Chennai,இந்தியா
17-செப்-201820:01:37 IST Report Abuse
Kirubakaran GO BACK MODI என்று போராட்டம் செய்துவிட்டு இப்போது வேறு மாதிரி பேசுகிறார்கள் இவர்களுக்கு நாம் தான் டைம் பாஸ்....
Rate this:
Share this comment
Cancel
Appavi Tamilan - Chennai,இந்தியா
17-செப்-201818:21:47 IST Report Abuse
Appavi Tamilan இந்தம்மா பேசுவதை அக்கட்சியினரே கண்டுகொள்வதில்லை.பாவம் தமிழச்சியாக இருந்தாலும், இந்த கும்பலில் தெரியாமல் மாட்டிக்கொண்டு, இவர் படும் சிரமம் இருக்கிறதே. இவர் வாயை திறந்தாலே மக்கள் சிரித்து விடுகின்றனர். இந்த லட்சணத்தில்,இவராவது ஸ்டாலின் அறிக்கைக்கு பதிலடி கொடுப்பதாவது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X