வண்டியூர் கண்மாயை தூர் வாரும் பணி: பொதுமக்களுக்கு 'உயிர்த்துளி' அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வண்டியூர் கண்மாயை தூர் வாரும் பணி: பொதுமக்களுக்கு 'உயிர்த்துளி' அழைப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை;மதுரையின் நீராதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வண்டியூர் கண்மாயில் கோடையிலும் தண்ணீர் தேக்கும் வகையில் ஆழப்படுத்தி, துார்வாரும் பணியை தொடர உள்ள 'உயிர்த்துளி' மக்கள் இயக்கத்துடன் தன்னார்வலர்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் இணைந்து செயல்பட அழைப்பு விடப்பட்டுள்ளது.
ஆழப்படுத்துவது அவசியம்
650 ஏக்கரிலுள்ள வண்டியூர் கண்மாய் மதுரையின் வரப்பிரசாதம். வைகை வடகரையின் நீலத்தடி நீர்மட்டத்தை இக்கண்மாய் நிர்ணயிக்கிறது. வறட்சியிலும் இதை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடின்றி இருக்க கண்மாயில் கோடையிலும் தண்ணீர் தேங்குவது அவசியம். இதனை கருத்தில் கொண்டு கண்மாயை ஆழப்படுத்தும் பணியை 'உயிர்த்துளி' இயக்கம் செயல்படுத்தவுள்ளது. 30 மீ., அகலம், 2 மீ., ஆழம், 1,000 மீ., நீளத்திற்கு ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கப்படும். வண்டியூர் பூங்கா கரைப்பகுதியை ஒட்டிய இடம் துார் வார தேர்வு செய்யப்பட்டுள்ளது. கண்மாய் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமை வகித்தார். நவாட்டெக் தலைவர் ஏ.சி.காமராஜ், மடீட்சியா ஒருங்கிணைப்பாளர் சத்யா ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர்.
பணிகள் ஒருங்கிணைப்பு
கண்மாயை ஆழப்படுத்தும் பணியை இம்மாத இறுதிக்குள் நடத்தவும், அதனை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் செய்தாலும், மாணவர்கள், மக்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் விதம் மண்ணை அள்ளி கரையில் கொட்டும் பணியும் நடக்கும். இதில் தன்னார்வமாக மக்கள் கலந்து கொள்ளலாம். பணிகள் நடக்கவுள்ள கண்மாய் பகுதியில் கருவேல மரங்கள் உள்ளதால் அவற்றை அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மடீட்சியா தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மேலாளர் ராமசாமி,பெரிய நாச்சியார் டிரஸ்ட் உச்சிமகாலிங்கம், நவாட்டெக் நிர்வாகிகள் பொறியாளர் ஈசன், மணிகண்டன், பிரபுதாஸ், தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்னாள் துணை இயக்குனர் நாகநாதன், நீர்வழிச்சாலைத் திட்ட நிர்வாகிகள் முருகப்பன், சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X