செக்யூரிட்டி வேலைக்கு செல்ல கிராமப்பகுதி ஆண்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செக்யூரிட்டி வேலைக்கு செல்ல கிராமப்பகுதி ஆண்கள் ஆர்வம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சூணாம்பேடு:விவசாய வேலையை விட, சற்றே சுலபமாக இருப்பதால், செக்யூரிட்டி வேலைக்குச் செல்ல கிராமவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சூணாம்பேடு சுற்று வட்டாரத்தில் விவசாயம் மற்றும் உப்பளம் முக்கியத் தொழிலாக இருக்கின்றன.இரு தொழில்களுமே தற்போது அவ்வளவாக லாபகரமாக இல்லாததால், அந்த வேலைகளுக்குச் செல்வதில் பகுதி மக்கள், சுணக்கம் காட்டி வருகின்றனர்.உடலுழைப்புகுறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட, அதிகம் படிப்பறிவற்ற கிராமத்து ஆண்கள், விவசாய வேலையில் ஈடுபாடின்றி காணப்படுகின்றனர். இதற்கு ஓரளவு உடலுழைப்பு தேவைப்படுவதும் முக்கிய காரணமாகும். இதனால், மேற்குறிப்பிட்ட வகையினரில் பெரும்பாலானோர், செக்யூரிட்டி எனப்படும் பாதுகாவலர் பணிக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்தப் பணிக்கு பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பதும், உணவு அங்கேயே அளிக்கப்படுகிறது என்பதும் காரணமாக உள்ளது.மாதம், 8,000 ரூபாய்க்கு குறையாத ஊதியம்; அங்கேயே இலவசமாக தங்குமிடம் அளிக்கப்படுகிறது. அதிகரிப்புஎனவே, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், ஏ.டி.எம்.,களில் காவலர் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X