திருப்பரங்குன்றத்திற்கு தேவை தீயணைப்பு நிலையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றத்திற்கு தேவை தீயணைப்பு நிலையம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பரங்குன்றம்:மதுரை மாநகராட்சி விரிவாக்கத்தில் அமைந்த ஆன்மிக சுற்றுலா தலம் திருப்பரங்குன்றம். இத்தொகுதி 30 கி.மீ., சுற்றளவு கொண்டது.இதை சுற்றி விரிவாக்கப்பகுதிகள் விரிவடைந்து கொண்டே செல்கின்றன. இதை சுற்றி கிராமங்களும் அதிகம். குடியிருப்புகள், குடிசை வீடுகள் அதிகம். இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கழிவு பஞ்சு குடோவுன்கள் உள்ளன.எதிர்பாராதவிதம் பஞ்சு குடாவுன்களில் தீ விபத்துஏற்பட்டு பஞ்சுகள் எரிந்து சேதமடைகின்றன. குன்றத்து மலையில் கருகிய புல் செடிகள், மரங்களில் அடிக்கடி தீ பற்றுகிறது.
திருப்பரங்குன்றம் தாலுகாவில் ஏராளமான கண்மாய்கள். குளங்கள் உள்ளன. அங்கு குளிக்கச் செல்பவர்களில் சிலர் தண்ணீருக்குள் மூழ்கிவிபத்தில் சிக்குகின்றனர்.திருப்பரங்குன்றத்தில் தீ விபத்துக்கள் உட்பட விபத்துக்கள் நடந்தால் மதுரை, திருமங்கலம்,அனுப்பானடி தீயணைப்பு நிலையங்களில் இருந்துதான் வாகனங்கள், வீரர்கள் வர வேண்டியுள்ளது.திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை 10, திருமங்கலம் 16 ,அனுப்பானடி 19 கி.மீ., துாரத்தில் உள்ளன. அங்கிருந்து புறப்படும் தீயணைப்புவாகனங்கள் போக்குவரத்து நெரிசலை கடந்துகுன்றத்திற்குள் வருவதற்குள் பொருள் சேதம், உயிர்சேதம் ஏற்படுகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குள் ஏராளமானகடைகள் உள்ளன.திருப்பரங்குன்றத்தில் ஏற்படும் தீ விபத்துக்கள், உயிர் சேதங்களை தடுக்க தீயணைப்பு நிலையம்அமைக்க வேண்டும் என முப்பதாண்டுகளாக வலியுறுத்தப்படுகிறது. இத்தொகுதியில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரத்தில் திருப்பரங்குன்றத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க முயற்சி செய்வேன் என வாக்குறுதி அளிப்பதுடன் சரி. வெற்றி பெற்றவுடன் மறந்து விடுகின்றனர். இப்பகுதியினரும் தீயணைப்பு நிலையம் வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். வரும் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., இங்கு தீயணைப்பு நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X