மதுரை மக்களை உற்சாகப்படுத்திய 'ஹேப்பி ஸ்டீரீட்' :கலகலப்பாக சென்ற நிமிடங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை மக்களை உற்சாகப்படுத்திய 'ஹேப்பி ஸ்டீரீட்' :கலகலப்பாக சென்ற நிமிடங்கள்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை:மதுரை மாநகராட்சி சார்பில் கீழ வெளி வீதியில் 'ேஹப்பி ஸ்டீரீட்' நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. 'வண்டியே வராது, வந்து விளையாடு' என்ற தலைப்பில் எட்டாவது முறையாக நடந்த இந்நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். கிரிக்கெட், கேரம், யோகா, கராத்தே, ஓவியபோட்டிகள், சைக்கிளிங், பரமபதம், நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் என பெண்களின் ஏகோபித்த வரவேற்புடன் ஒவ்வொரு நிமிடமும் கலகலப்பாக சென்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பதக்கம், சான்று, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு தினமலர் நாளிதழ் ஊடக உதவியை வழங்கியது.

முதலிடம் நோக்கி
மதுரை கலெக்டர் எஸ்.நடராஜன் பேசியதாவது: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், சித்திரை திருவிழாவிற்கு அடுத்து நடக்கும் மிகப்பெரிய விழா 'ேஹப்பி ஸ்டீரீட்'. நான் பொறுப்பேற்ற பின் மக்களை நேரடியாக சந்திக்கும் முதல் நிகழ்ச்சி. இங்கு ஒரு உறுதி தருகிறேன். அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி, முதன்மை மாவட்டமாக மதுரை மாற்றப்படும். கல்வி வளர்ச்சி, நீர்நிலை மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்நிகழ்ச்சி உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு வழி செய்கிறது. கவலையை மறந்து மக்கள் கொண்டாடி மகிழுங்கள். இதன் மூலம் மக்களுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் நல்ல நட்பு ஏற்படுகிறது என்றார்.
இலவச துணிப்பைகள்மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர், பாலிதீன் பை ஒழிப்பை வலியுறுத்தும் விதம் பங்கேற்றவர்களுக்கு 'துணிப்பைகள்' வழங்கினார். இலவச மருத்துவ முகாம், அரசின் நலத்திட்டம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பள்ளி சிறுவர்கள் தேசிய தலைவர்கள் போல் மாறுவேடமிட்டு பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தினர்.
மகிழ்ச்சி தந்த திருவிழா
எம்.சுவாதி:வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் அதிகம் செல்லும் ரோட்டில் ஜாலியாக விடுமுறையில் குழந்தைகளுடன் இணைந்து பல்வேறு விளையாட்டுக்களில் பங்கேற்றது மகிழ்ச்சி தந்தது. இது மிக பயனுள்ள விஷயம். இதன் மூலம் அரசுக்கும், மக்களுக்கும் தொடர்பு பாலம் ஏற்படும். வரி செலுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வால், முறையாக வரிசெலுத்த வேண்டியதின் அவசியத்தை அறிந்தோம்.
அலைபேசியில்லா ஆனந்தம்
ஆர். ஐஸ்வர்யா: வாகனநெரிசல் நிறைந்த ரோட்டில் வாகன இரைச்சலே இன்றி விளையாடியது மகிழ்ச்சி. விடுமுறையில் அலைபேசி முன் முடங்காமல் காலையில் சுத்தமான காற்றை சுவாசித்து விளையாடி மகிழ்வதின் மூலம் மற்றவர் உணர்வு, மகிழ்ச்சியையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பை 'ேஹப்பி ஸ்டீரீட்' தந்தது.ஒற்றுமையின் அவசியம்டி.எஸ்.சுபஸ்ரீ: பள்ளியில் நடக்கும் விளையாட்டுக்களில் சிறுவர்களை, அவர்களது தாத்தா, பாட்டி, பெற்றோர் பார்த்து மகிழ முடியாது. இந்நிகழ்ச்சியி்ல் குடும்பத்துடன் விளையாடுதன் மூலம் சிறுவர்களின் திறமைகளை பார்த்து தாத்தா, பாட்டிகள் சந்தோஷம் அடைகின்றனர். குடும்ப ஒற்றுமை மற்றும் கூட்டு குடும்பத்தின் அவசியத்தை உணர்த்தும் விழாவாகவும் அமைந்தது.
பாலீதீன் ஒழிப்பு அவசியம்
கே.எஸ்.கீர்த்திகா: பாலிதீன், பிளாஸ்டிக் ஒழிப்பின் அவசியம் குறித்து அறியும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. அதனால் ஏற்படும் தீங்குகளை வெளிக்காட்டியதால் ஒவ்வொரு குடும்ப பெண்களும் வீடுகளில் பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டை தவிர்த்தால், மதுரையை மாசில்லா நகராக்க முடியும் என அறிந்தேன்.
மனஅழுத்தம் பறந்தது
எஸ்.ஆர்., கீர்த்தி: சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பயன்பெறும் விதத்தில் அனைத்து விளையாட்டுக்களும் இருந்தன. மேலும், மன அழுத்தத்தில் இருந்து விடுபட குடும்பத்துடன் விளையாட்டு, கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவசியம் என உணர்த்தியது. தொடர்ந்து 'ேஹப்பி ஸ்டீரீட்' நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அவற்றில் பாரம்பரிய விளையாட்டுகளையும் சேர்த்தால் சிறப்பாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X