எச்.ராஜா மீது 7 பிரிவில் வழக்கு திருமயம் போலீசார் நடவடிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எச்.ராஜா மீது 7 பிரிவில் வழக்கு திருமயம் போலீசார் நடவடிக்கை

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை, : போலீசார் மற்றும் நீதிமன்றம் குறித்து அவதுாறாக பேசிய, பா.ஜ., தேசிய செயலர்எச். ராஜா மீது, ஏழு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை, திருமயம் அருகே, மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கியது.பா.ஜ., தேசிய செயலர் எச். ராஜா தொடங்கி வைத்து, மெய்யபுரம் வீதிகளில், விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல முயன்றார். 'ஊர்வலம் ஊருக்குள் செல்லக் கூடாது' என, போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதற்கு, ராஜா எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கும், போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து, மதுரை - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.எஸ்.பி., செல்வராஜ் மற்றும் போலீசார், பேச்சு நடத்தி, ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கினர். ஊர்வலத்தில், ராஜாவுக்கும், திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜா, போலீஸ் மற்றும் நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்து பேசினார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இந்நிலையில், திருமயம் போலீசார், ராஜா உட்பட, 18 பேர் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப்படுத்தும் வகையில் விமர்சித்தல் உள்ளிட்ட, ஏழு பிரிவுகளில், வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
17-செப்-201819:55:30 IST Report Abuse
பெரிய ராசு நீங்க 1000 பிரிவில் வழக்கு பதிவு செய் ஆனா ஒரு ஆணியும் புடிங்கமுடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X