நடிகை நிலானி நண்பர் தீ குளித்து தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடிகை நிலானி நண்பர் தீ குளித்து தற்கொலை முயற்சி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: 'டிவி' நடிகை நிலானியின் ஆண் நண்பர், தீ குளித்து தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, வளசரவாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர், நிலானி, 36. இவர், 'டிவி சீரியல்' நடிகை. தன்னை பிரபலமாக்க துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, போலீசாரை அவதுாறாக பேசிய, 'வீடியோ'வை, சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.இதையடுத்து வடபழனி போலீசார் ஐந்து பிரிவுகளில், நிலானி மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், 'நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான், அந்த வீடியோவை வெளியிட்டேன். இதன் மூலம், பட வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்தேன்' என, நிலானி தெரிவித்தாள்தற்போது நிலானி, ஜாமினில் வெளியே வந்து, 'டிவி' சீரியல்களில் நடித்து வருகிறார்.கணவரை பிரிந்து வாழும் நிலானியிடம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, காந்தி லலித்குமார், 33, என்பவர், நட்புடன் பழகி வந்தார். மேலும் அவர், தன்னை திருமணம் செய்ய கொள்ள வேண்டும் என, நிலானியை வற்புறுத்தி உள்ளார்.நேற்று முன்தினம் நிலானி படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது, அலைபேசியில் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தீ குளிப்பதாக மிரட்டியுள்ளார்.இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், நிலானி புகார் அளித்தார். அதன் பின், இருவரும் பேசி, சமரசம் செய்து கொண்டனர்.இந்நிலையில், காந்தி லலித்குமார் பெட்ரோலை உடம்பில் ஊற்றி, தீ குளித்தார். அக்கம் பக்கத்தில் இருந்தோர், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X