ஐ.பி.எஸ்.,களுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை; சி.பி.ஐ., அதிகாரிகளிடம் மாதவ ராவ் சத்தியம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஐ.பி.எஸ்.,களுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை
சி.பி.ஐ., அதிகாரிகளிடம் மாதவ ராவ் சத்தியம்

'குட்கா ஆலை நடத்த, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தது உண்மை' என, சி.பி.ஐ., அதிகாரி களிடம், மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோர், சத்தியம் செய்துள்ளனர்.

 ஐ.பி.எஸ்.களுக்கு, லஞ்சம், கொடுத்தது, உண்மை ,சி.பி.ஐ., அதிகாரிகளிடம், மாதவ ராவ் ,சத்தியம்

சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்தவர், மாதவராவ். செங்குன்றம் அருகே, குட்கா ஆலை மற்றும் குடோன் நடத்தி வந்தார். இதன் பங்குதாரர்களாக, உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் செயல்பட்டனர்.இவர்கள், 2013ல், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து, தமிழகம் முழுவதும் சப்ளை செய்து, பல கோடி ரூபாய் குவித்தனர்.


சட்டவிரோத செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், அப்போது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், சுகாதாரத்துறை அமைச்சர், விஜய பாஸ்கர் உள்ளிட்டோருக்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக

புகார் எழுந்தது.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து, மாதவ ராவிடம் வாக்குமூலம் பெற்று உள்ளனர். அதேபோல, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு பதிந்தனர்.


தற்போது, இந்த வழக்கு, சி.பி.ஐ., க்கு மாற்றப்பட்டு, செப்., 5, 6ல், ஜார்ஜ், விஜய பாஸ்கர் வீடுகள் உட்பட, 40 இடங்களில், அதிரடி சோதனை நடந்தது.மேலும், மாதவராவ், சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள் என, ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். கைதானவர்களை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.


இவர்களில், மாதவராவ், சீனிவாச ராவ் ஆகியோருக்கு, இன்று வரை காவல் நீட்டிப்பு செய் யப்பட்டு உள்ளது.அதனால், இருவரிடமும் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தி உள்ள, சி.பி.ஐ., அதிகாரிகள், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். மேலும், சட்ட விரோத குட்கா ஆலை மற்றும் குடோன் செயல்பட்ட காலகட்டத் தில், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த, சம்பத்குமாரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.


அப்போது, மாதவ ராவிடம் இருந்து லஞ்சம் பெற்று, இடைத்தரகர்கள் இருவர் வாயிலாக, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட, உயர் போலீஸ் அதிகாரி களுக்கு கொடுத்ததாக, சம்பத்குமார் கூறியுள்ளார்.

Advertisement

மேலும்,புழல் உதவி கமிஷனராக இருந்த, மன்னர் மன்னன், இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும், அவர் கூறிய தாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதற்கிடையில், சி.பி.ஐ., அதிகாரிகளிடம், மாதவ ராவ், சீனிவாச ராவ் ஆகியோர் அளித்து உள்ள வாக்குமூலம்:போலீஸ் உயர் அதிகாரி கள், உணவு பாதுகாப்பு துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநக ராட்சி உயர் அதிகாரிகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை; இது சத்தியம். இவ்வாறு அவர்கள்கூறியுள்ளனர்.அடுத்த கட்டமாக, டி.எஸ்.பி., மன்னர்மன்னனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.


- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-செப்-201821:32:55 IST Report Abuse

kulandhaiKannanWhat H. Raja commented about police is proved correct

Rate this:
17-செப்-201817:03:25 IST Report Abuse

நக்கல்ஸ்டாலின் எடபாடிக்கிட்ட என்ன சொல்லி இருப்பார்.. ஒழுங்கா எங்களுக்கு அப்பவே கமிஷன் கொடுத்திருந்தா உங்களுக்கு இந்த நிலை வந்திருக்குமா?? இனிமேவாது பார்த்து பண்ணுங்க...

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
17-செப்-201816:16:50 IST Report Abuse

sahayadhasதிருட்டுக்கும், லஞ்சத்திற்கும் என்ன வேறுபாடு.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X