காங்கிரீட் கால்வாய்களை தூர்வர முடியாத அளவு ஆக்கிரமிப்பு:நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் முடக்கம்| Dinamalar

தமிழ்நாடு

காங்கிரீட் கால்வாய்களை தூர்வர முடியாத அளவு ஆக்கிரமிப்பு:நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் முடக்கம்

Updated : செப் 17, 2018 | Added : செப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
காங்கிரீட் கால்வாய்களை தூர்வர முடியாத அளவு ஆக்கிரமிப்பு:நிதி ஒதுக்கீடு இல்லாததால் பணிகள் முடக்கம்

நகரில் கிருதுாமால் நதி உட்பட பிரதான 13 கால்வாய்கள் காங்கிரீட் கால்வாய்களாக மாற்றப்பட்டுள்ளன. கண்மாய்களுக்கான வரத்துக் கால்வாய்களுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியதால் இவை சில ஆண்டுகளுக்கு முன் காங்கிரீட் கால்வாய்களாக மாற்றப்பட்டன.
அனைத்து கால்வாய்களுக்கு கரைப்பகுதிகள் இருக்கும். ஆனால் காங்கிரீட் கால்வாய்களின் பெரும்பகுதிகளுக்கு கரைப்பகுதிகள் இல்லை. இவை அனைத்தும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால் இந்த கால்வாய்களை துார்வாருவதற்கு மண்அள்ளும் இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை.
கால்வாய்களுக்குள் இந்த இயந்திரங்களை இயக்கி துார்வாரினால் அதனை கொட்டுவதற்கு கரைகள் இல்லை.கரைகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் பொதுப்பணித்துறையும், மாநகராட்சியும் அக்கறை காட்டவில்லை.
துார்வாரும் பணிகளுக்கு மாநகராட்சியில் தனி ஒதுக்கீடுகள் இல்லை. இதனால் பணிகள் முடங்கி கிடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்களின் சங்கங்களை அழைத்து ஏதாவது ஒரு கால்வாயில் துார்வார கோரிக்கை வைப்பது வழக்கமாக உள்ளது. இதனை சம்பிரதாயமாக நடத்தி, பணிகள் முடிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு வருகிறது.
மழைக்காலம் துவங்க உள்ளதால் கால்வாய் சீரமைப்புக்கு தனி நிதி ஒதுக்கீடு பெற்று சுகாதார சீர்கேட்டில் உள்ள அனைத்து கால்வாய்களையும் மாநகராட்சி துாய்மைப்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
20-செப்-201811:48:20 IST Report Abuse
Welcome Back to 1900AD கடைசி மனிதன் உள்ளவரை கால்வாய் சாக்கடையாக பயன்படுத்தப்படும்.நன்றி தினமலர்.வரத்து கால்வாய் போக்கு கால்வாய் பெயர் மட்டும் நன்றாக உள்ளது.கிருத்துமால் நதி அழிந்து அரை நூற்றாண்டு.
Rate this:
Share this comment
Cancel
Raj - Chennai ,இந்தியா
17-செப்-201815:24:00 IST Report Abuse
Raj ஆக்கிரமிப்பு அகற்ற மாட்டானுங்க - லஞ்சம் கிடைக்காது. அதனால தேவையில்லாத வேலை செய்து வரி ஏத்துவானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X