ஐ.பி.எஸ்.,களுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை : சி.பி.ஐ., அதிகாரிகளிடம் மாதவராவ் சத்தியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எஸ்.,களுக்கு லஞ்சம் கொடுத்தது உண்மை : சி.பி.ஐ., அதிகாரிகளிடம் மாதவராவ் சத்தியம்

Added : செப் 17, 2018
Advertisement

சென்னை: 'குட்கா ஆலை மற்றும் கோடவுன் நடத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுத்தது உண்மை' என, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் மாதவராவ் சீனிவாச ராவ் ஆகியோர், சத்தியம் செய்துள்ளனர்.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர், மாதவராவ். செங்குன்றம் அருகே, குட்கா ஆலை மற்றும் கோடவுன் நடத்தி வந்தார். பங்குதாரர்களாக, உமா சங்கர் குப்தா, சீனிவாச ராவ் ஆகியோர் செயல்பட்டனர். இவர்கள் 2013ல் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து, தமிழகம் முழுவதும் சப்ளை செய்து, பல கோடி ரூபாய் குவித்தனர்.இவர்களின் சட்டவிரோத செயல்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், அப்போது, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால் துறை அதிகாரி பாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து, மாதவராவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதேபோல, லஞ்ச ஒழிப்பு போலீசாரும் வழக்கு பதிந்தனர். தற்போது, இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டு, செப்., 5, 6ல், ஜார்ஜ், விஜயபாஸ்கர் வீடுகள் உட்பட, 40 இடங்களில், அதிரடி சோதனை நடந்தது. மேலும், மாதவராவ், சீனிவாசராவ், உணவு பாதுகாப்பு மற்றும் கலால் துறை அதிகாரிகள் என, ஐந்து பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். கைதானவர்களை நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.இவர்களில், மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோருக்கு, இன்று வரை காவல் நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. இருவரிடமும் விசாரணை நடத்தி உள்ள சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.மேலும், சட்ட விரோத குட்கா ஆலை மற்றும் கோடவுன் செயல்பட்ட காலகட்டத்தில், செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத்குமாரிடமும் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.அப்போது, மாதவராவிடம் இருந்து லஞ்சம் பெற்று இடைத்தரகர்கள் இருவர் வாயிலாக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சம்பத்குமார் கூறியுள்ளார். மேலும், புழல் உதவி கமிஷனராக இருந்த மன்னர் மன்னன், இதற்கு உடந்தையாக இருந்தார் என்றும், அவர் கூறியதாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில், சி.பி.ஐ., அதிகாரிகளிடம், மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் வாக்குமூலத்தில் 'உயர் போலீஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை, கலால் துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுத்தது உண்மை; இது சத்தியம்' என கூறியுள்ளனர். அடுத்த கட்டமாக டி.எஸ்.பி., மன்னர் மன்னனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X