ராணுவ தளவாட பொருள்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராணுவ தளவாட பொருள்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: 'ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு தளவாட பொருட்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது' என ராணுவ உற்பத்தித் துறை செயலர் அஜய்குமார் தெரிவித்துள்ளார். 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ள விவரம்: ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு தளவாட பொருட்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகில் 2013 -- 2017 வரை நடந்த மொத்த இறக்குமதியில் 12 சதவீதம் இந்தியாவினுடையது. இதற்கு அடுத்ததாக சவுதி அரேபியா 10; எகிப்து 4.5; ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் 4.4; சீனா 4 சதவீதமும் இறக்குமதி செய்துள்ளன.அதேபோல, ராணுவ தளவாட பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 34 சதவீதம், அந்நாட்டின் பங்காகும். இதற்கு அடுத்ததாக ரஷ்யா 22; பிரான்ஸ் 6.7; ஜெர்மனி 5.8; சீனா 5.7 சதவீதமும் ஏற்றுமதி செய்துள்ளன.இந்த தகவல் சுவீடன் நாட்டின் ஸ்டாக் ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி மையத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.இவ்வாறு அஜய்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X