போ லீ ஸ் டை ரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போ லீ ஸ் டை ரி

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

சென்னை வாலிபர் மீது தாக்குதல்சென்னை, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன்கள் நந்தகுமார், 27; புவனேஷ்குமார், 26. நேற்று முன்தினம், சென்னையிலிருந்து காரில், மங்கலம் கிராமத்திற்கு சென்றனர். இவர்களுக்கு சொந்தமான, கல்குவாரியை பார்த்து, சென்னைக்கு திரும்பி சென்றனர்.செங்கல்பட்டு அடுத்த, புலிப்பாக்கம் அருகே, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், காருக்கு வழிவிடாமல் தாறுமாறாக ஓட்டிச்சென்றனர். இதனால், நந்தகுமாருக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் நடந்தது.ஆத்திரமடைந்த, ஆறு பேர் கும்பல், கார் கண்ணாடியை உடைத்து, நந்தகுமாரை சரமாரியாக தாக்கி, தப்பிச்சென்றனர். பலத்த காயமடைந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். புவனேஷ்குமார் அளித்த புகாரை அடுத்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார், ஆறு பேரை தேடுகின்றனர்.-ஓடை மணலை கடத்தியவர் கைதுதிருக்கழுக்குன்றம் அடுத்த, வீராபுரம் ஏரி அருகே, ஓடை மணல் கடத்துவதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏரி ஓடையிலிருந்து மணல் கடத்தி வந்த மாட்டு வண்டியை, போலீசார் மடக்கி பிடித்தனர். பின் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம், 40, என்பவரை கைது செய்த போலீசார், மாட்டு வண்டியுடன், அரை யூனிட் ஓடை மணலை பறிமுதல் செய்தனர்.-காய்கறி வியாபாரிக்கு கத்திக்குத்துதிருவள்ளூர் அடுத்த, விடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மாணிக்கம், 60; காய்கறி வியாபாரி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செங்கொடி மகன் பாண்டியன், 45, என்பவருக்கும், முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில், 14ம் தேதி, மாணிக்கம், வியாபாரம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த பாண்டியன், மாணிக்கத்தை திட்டி, கையில் வைத்திருந்த பேனா கத்தியால் குத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. திருவள்ளூர் தாலுகா போலீசில், மாணிக்கம் அளித்த புகாரையடுத்து, போலீசார், பாண்டியனைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.-சாலை விபத்தில் பக்தர் பலிதிருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் காசி, 63. இவர், இரு நாட்களுக்கு முன், திருவண்ணாமலையில் இருந்து திருமலைக்கு, உறவினர்களுடன் பாத யாத்திரை சென்றுக் கொண்டிருந்தார். நேற்று, சித்துார் மாவட்டம், குடிபாலா அடுத்த, பள்ளூர் அருகே சென்றபோது, வேலுாரில் இருந்து, ஆந்திர மாநிலம் கர்நுால் நோக்கி சென்றுக் கொண்டிருந்த, ஆர்.டி.சி., பஸ், காசி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பக்தர் காசி, சம்பவ இடத்திலேயே இறந்தார். குடிபாலா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.-விபத்தில் வாலிபர் பலிகடப்பா மாவட்டம், புலிவந்தலுா அடுத்த, நந்தி மண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மஸ்தானய்யா மகன் பவுன்குமார், 24. இவர், நேற்று முன்தினம், சித்துார் மாவட்டம், பிலோறு டவுனில் உள்ள அத்தை பாக்கியம்மாள் வீட்டிற்கு, இருசக்கர வாகனத்தில் வந்தார். அங்கிருந்து, அன்று மாலையே, சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வெங்கடாத்ரி கிராமம் அருகே, ஒரு வளைவில் எதிரே வந்த மினி வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பவுன்குமார், சம்பவ இடத்திலேயே இறந்தார்.- விவசாயி தற்கொலைசித்துார் மாவட்டம், கங்கவரம் அடுத்த, எல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத், 52; விவசாயி. இவர், பயிர் செய்வதற்கு, பலரிடம் கடன் வாங்கியிருந்தார்.பயிரில் போதிய வருமானம் இல்லாததால், கடும் நஷ்டம் அடைந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி தரும்படி நெருக்கடி கொடுத்தனர். இதனால், மனமுடைந்த, பிரசாத், நேற்று, விஷம் குடித்து, மயங்கி விழுந்து இறந்தார். -சாலை விபத்தில் ஒருவர் பலிதிருவள்ளூர், எம்.பி.எஸ். தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்வரன் மகன் விஸ்வநாதன், 43; எலக்ட்ரிஷியன் ஒப்பந்தாரர். இவர், 7ம் தேதி, வேலை சம்பந்தமாக, இருசக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதுார் பகுதிக்குச் சென்றார். அங்கு வேலையை முடித்துக் கொண்டு, அதே வாகனத்தில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது, தொடுகாடு அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து, படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, சென்னை, அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று முன்தினம் இரவு இறந்தார். -மணல் கடத்திய இருவர் கைதுதிருவள்ளூர் அடுத்த, மப்பேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு, நரசமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கை நடத்தினர். அப்போது, அவ்வழியாக, அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்துக் கொண்டிருந்த, இரு லாரிகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.மேலும், லாரி ஓட்டுனர்கள், காந்திபேட்டை முனுசாமி, 24, தொடுகாடு, பிரபு, 27 ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X