கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மாமல்லபுரம்:மாவட்டத்தின் பல இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மாமல்லபுரம் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளில், கடலில் கரைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், 13ம் தேதி, பொது இடங்களில், விநாயகர் சிலை அமைத்து வழிபட்டனர்.நேற்று முன்தினம், பிற அமைப்பினரின் குறைவான சிலைகள், மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன; இந்து முன்னணி அமைப்பின் சிலைகள், நேற்று கரைக்கப்பட்டன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளின் சிலைகள், பல்வேறு வாகனங்களில், மாமல்லபுரம் கடற்கரைக்கு, நேற்று காலையிலிருந்து கொண்டு வரப்பட்டன.விநாயகர் சிலை வைப்பது, கரைப்பது தொடர்பாக, அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, சிலையுடன் வந்தவர்களை, போலீசார் கட்டுப்படுத்தி, சிலரை மட்டுமே அனுமதித்தனர்.கடற்கரையில், போலீசார் அமைத்த டிராலியில், சிலையை ஏற்றி, கடலுக்கு கொண்டு சென்று, போலீஸ் ஏற்பாடு செய்த ஆட்கள், கடலில் மூழ்கடித்தனர். 300க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.செங்கல்பட்டு நகரில் வைக்கப்பட்ட, 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் வழியாக, மாமல்லபுரம் கடலுக்கு சென்றது. அங்கு, சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன வண்டலுாரில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கோவளம், மாமல்லபுரம், நீலாங்கரை நீர்நிலை பகுதிகளில் கரைக்கப்பட்டன திருக்கழுக்குன்றம் மற்றம் திருப்போரூர் பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கடலில் கரைக்க, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில், நேற்று, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X