போர்வெல் உரிமையாளர்கள், 'ஸ்டிரைக்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போர்வெல் உரிமையாளர்கள், 'ஸ்டிரைக்'

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, போர்வெல் உரிமையாளர்கள், நேற்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இந்தியாவில், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே வருகிறது. இதனால், அனைத்து ரக வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்கள், கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, டீசல், பெட்ரோல் தினசரி உயர்ந்து வருவதால், பேருந்து, லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் இயக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள போர்வெல் உரிமையாளர்கள் மற்றும் ஏஜன்ட் சங்கத்தின் சார்பில், திருத்தணியில், நேற்று டீசல், பெட்ரோல் உயர்வை கண்டித்து, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.சங்க தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். செயலர் கிருஷ்ண நாயுடு வரவேற்றார். இதில், 70க்கும் மேற்பட்ட போர்வெல் (ஆழ்துளை கிணறு அமைக்கும்) உரிமையாளர்கள், ஏஜென்ட்டுகள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, சங்க தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:டீசல், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டு உள்ளதால், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்துள்ளோம். மேலும், இனிவரும் நாட்களில், ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு, ஒரு அடி, பள்ளம் எடுப்பதற்கு மட்டும், குறைந்தபட்சம், 90 ரூபாய் (200 அடி வரை), அதிகபட்சம், 415 ரூபாய் (1,000 அடி வரை) கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X