தனித்து போட்டி : மாயாவதி மிரட்டல்| Dinamalar

தனித்து போட்டி : மாயாவதி மிரட்டல்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ: ''அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், எங்களுக்கு போதிய அளவில் தொகுதிகளை ஒதுக்காவிட்டால், தனித்து போட்டியிடுவோம்,'' என, பகுஜன் சமாஜ் தலை வர், மாயாவதி அறிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வருமான, மாயாவதி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக, 'மெகா' கூட்டணி அமைக்க, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேச்சு நடத்தி வருகின்றன. நாங்களும், இது தொடர்பாக பேசி வருகிறோம்.ஆனால், லோக்சபா தேர்தலில், எங்களுக்கு போதிய அளவில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்; இல்லையெனில், தனித்து போட்டி யிடுவதில், எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.இதற்காக,எங்களை, கூட்டணிக்கு எதிரானவர்களாக கருதக் கூடாது. பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டுமென்பதே, எங்கள் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X