தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு;எஸ்டேட் பகுதிகளில் தொலை தொடர்பு வசதி செய்து தரக்கோரி மூணாறில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மூணாறு அருகில் உள்ள தென்மலை எஸ்டேட் பாக்டரி, லோயர், ராஜமலை, பெட்டிமுடி, பெரியவாரை எஸ்டேட் சோலைமலை,ஆனமுடி ஆகிய பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் தொலை தொடர்பு சேவை இன்றி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைக்கண்டித்து நேற்று மூணாறில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் தேயிலைதோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மூணாறு ஊராட்சி தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.கேரள மாநில காங்., துணை தலைவர் மணி, மாவட்ட செயலாளர் முனியாண்டி, தேவிகுளம் ஒன்றிய தலைவர் குமார், மாவட்ட பஞ்., உறுப்பினர் விஜயகுமார், இந்திய கம்யூ.,மூணாறு மண்டல செயலாளர் பழனிவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தொலை தொடர்பு வசதி செய்து தரக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது.முன்னதாக நகரில் ஊர்வலம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X