பிளக்ஸ் அகற்ற எஸ்.பி.,க்கு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளக்ஸ் அகற்ற எஸ்.பி.,க்கு கோரிக்கை

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி;தேனி போலீசார், என்.ஆர்.டி., நகரில் விபத்து ஏற்படுத்தும் பிளக்ஸ் போர்டை அகற்றுவதற்கு பதில், இடையூறு ஏற்படுத்தாத பிளக்ஸ் போர்டு அகற்றியுள்ளனர். இதனால் மீண்டும் சிறுவிபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேனி என்.ஆர்.டி., நகர் மெயின் ரோட்டில் தனியார் மஹால் செல்லும் சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் முக்கிய நிறுவனங்கள், வணிக கடைகள், மருத்துவமனைகள் உள்ளன. ஆனந்த் மஹால் ரோட்டில் இருந்து என்.ஆர்.டி., ரோடு செல்லும் பகுதியில் வலது புறம் தனியார் நிறுவனம் வாகனங்கள் மேல்நோக்கி (என்.ஆர்.டி., நகர் நோக்கி) வருவதை மறைத்து, பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. உடனடியாக தேனி போலீசார் சுவரில் மாட்டியிருந்த, இடையூறு ஏற்படுத்தாத மருத்துவமனையின் பிளக்ஸ் போர்டை அகற்றிவிட்டனர்.
ஆனால், சந்திப்பின் வலது புறத்தில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, விபத்து அபாயத்தில் உள்ள பிளக்ஸ் போர்டை அகற்ற வில்லை. தேனி போலீசார் தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் குறிப்பிட்ட இடங்களில் பிளக்ஸ் வைக்க அனுமதி வழங்கக்கூடாது. குறிப்பாக டூவீலர்கள் விபத்து அடிக்கடி ஏற்படுவதால் போலீசார் இதை கவனத்தில் எடுத்து, பிளக்ஸ் அகற்ற வேண்டும் என என்.ஆர்.டி., நகர் பொதுமக்கள் எஸ்.பி., பாஸ்கரனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X