ஆங்கில திறனை வளர்ப்பது அவசியம் :மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆங்கில திறனை வளர்ப்பது அவசியம் :மாணவர்களுக்கு பேராசிரியர் அறிவுரை

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி;''தகவல் பரிமாற்றத்திற்கு ஆங்கில மொழித்திறன் அவசியம்,''என, தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர் நாராயணசாமி பேசினார்.இக்கல்லுாரி பட்டமளிப்பு விழா கம்மவார் சங்க பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையில் நடந்தது.
முதல்வர் நாகரத்தினம் வரவேற்றார். சங்க தலைவர் நம்பெருமாள், கல்லுாரிச் செயலாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சி என்.ஐ.டி., கல்லுாரியின் தொழில்நுட்ப உற்பத்தித்துறையின் பேராசிரியர் நாராயணசாமி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மட்டுமே அடுத்தடுத்த தொழில்நுட்பங்கள், முன்னேற்றங்கள் உடனுக்குடன் வந்து கொண்டே இருக்கின்றன.
அதனால் பொறியியல் மாணவர்கள் துறைசார்ந்த சமீபத்திய முன்னேற்றங்களை அறிந்து புரிந்து படித்துக் கொள்வது அவசியம். கவனமான படிப்புடன், தகவல் பரிமாற்றத்திற்கு ஆங்கில மொழித்திறன் இருந்தால் சாதிக்கலாம். அதனை வளர்க்க வேண்டும், என்றார். முதுகலை எம்.இ., வி.எல்.சி., டிசைனிங் துறை மாணவிகள் வெண்ணிலா பல்கலை அளவில் 13வது இடம், மாணவி சித்ரா 7 வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 253 மாணவர்கள் இளநிலை பட்டங்களையும், 9 பேர் முதுகலை பட்டங்களையும் பெற்றனர். ஏற்பாடுகளை துணை முதல்வர் ராஜநாராயணன், பேராசிரியர்கள், அலுவலர் கிருஷ்ணக்குமார் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X