விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலியான சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் கணவர் கண் முன் மனைவி பலியான சோகம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூணாறு:மூணாறு அருகே கொச்சி--தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகானல் பகுதியில் டிப்பர் லாரி மோதியதில் கணவர் கண் முன் மனைவி பலியானர்.இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே ஆமையாறு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ், 40. இவர், மனைவி சரிதா, 36, மகன் மஜூ, 11, ஆகியோருடன் டூவீலரில் நேற்று காலை மூணாறு நோக்கி வந்தார்.
கொச்சி---தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பெரியகானல் பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி, டூவீலர் மீது மோதியது.இதில் அதில் பயணித்த மூவரும் துாக்கி வீசப்பட்ட நிலையில், சரிதா லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ் , மஜூ லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X