ஜல்லிக்கட்டு காளையை கண்டு பிடிக்க உதவும் 'ஜிபிஎஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு காளையை கண்டு பிடிக்க உதவும் 'ஜிபிஎஸ்'

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜல்லிக்கட்டு காளையை கண்டு பிடிக்க உதவும் 'ஜிபிஎஸ்'

திருப்புத்துார்:வளரும் தொழில்நுட்பத்தில் காணாமல் போகும் காளைகளை ஜி.பி.எஸ்.கருவியை கிராமங்களில் பயன்படுத்துவதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
முன்பெல்லாம் மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகள் சுதந்திரமாக ஓடி விடும். பல நாட்களுக்குப் பின்னர் தான் உரிமையாளரின் வீட்டிற்கு திரும்பும். இதற்காக காளைகளுக்கு வழி தெரிய வைப்பதற்காக பெரும்பாலும் நடத்தியே காளைகளை மஞ்சுவிரட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இப்போது எல்லாம் மாறி விட்டது. வாகனத்தில் தான் காளைகளை அழைத்துச் செல்கின்றனர். இதனால் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கும் உரிமையாளரின் வீட்டிற்கு செல்ல பாதை தெரியாமல் வெளியே சுற்றுகின்றன. இதனால் காளைகளின் உடலில் உரிமையாளரின் அலைபேசி எண்ணை எழுதத் துவங்கினர்.
அந்த காளைகளைப் பார்க்கும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் அந்த எண்ணிற்கு பேசி காளை உரிமையாளரிடம் காளை இருக்கும் இடத்தை சொல்லி உதவுவார்கள். இப்போது அதை விட கூடுதல் தொழில்நுட்பமான 'ஜிபிஎஸ்' முறையைப் பயன்படுத்தத் துவங்கினர்.
அதாவது, குளோபல் பொசிசனிங் சிஸ்டம்
இதை தமிழில் புவியிடங்காட்டி, உலக இடநிலை உணர்வி,தடங்காட்டி என்கிறார்கள். வானில் இருந்து செயற்கைகோள் மூலம் உலகில் ஓரிடத்தைத் துல்லியமாக அறிய உதவும் கருவியின் திட்ட அமைப்பாகும். இந்த வசதியை ராணுவத்தில் தான் முதலில் அதிகமாக பயன்படுத்தினர். ராணுவ வீரர்கள் நடமாட்டம், காணாமல் போன கப்பல், விமானங்களை கண்டறிதல் என்று பல வழிகளில் உதவியது. பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. தற்போது நான்கு வழி, இருவழிச் சாலைகளை சர்வே செய்ய இந்த முறையைத் தான் பயன்படுத்தி சில நாட்களிலேயே பல கி.மீ., துாரத்தை எளிதாக சர்வே செய்து வரைபடம் தயாரித்து விடுகின்றனர்.
இப்போது நம்மூர் ஜல்லிக்கட்டு பிரியர்கள் காளைகளை கண்டறியவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.'ஜிபிஸ் டிரேக்கிங் டிவைஸ்,' எனப்படும் கருவியை வாங்கி அதில் உரிமையாளரின் அலைபேசியில் சிம் பொருத்தி காளையின் கொம்பில் மாட்டி விடுகின்றனர். இதனால் எளிதாக காளைகள் இருக்கும் இடத்தை தங்கள் அலைபேசியில் பார்த்து கண்டுபிடித்து விடுகின்றனர்.
திருவுடையார்பட்டி மார்த்தாண்டான் கூறுகையில், இந்தக் கருவியில் நான்கு நாட்கள் வரை மின்சாரம் இருப்பதால் அதற்குள் காளையை கண்டு பிடித்து விடலாம். தற்போது சோலார் கருவியைக் கூட பொருத்தியுள்ளதால் தாமாகவே மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும். அலைபேசியில் பார்த்தாலே வரைபடத்தில் காளை இருக்கும் இடத்திற்கும் நாம் இருக்கும் இடத்திற்குமான துாரம் கூட தெரிந்து விடும். எளிதாக பிடித்து விடலாம். ரூ 5000 வரை பல விலைகளில் உள்ளது. ஒரு கருவில் மூன்று செல்களை இணைக்கலாம்.' என்கிறார்.
இதே போன்று முன்பு வலசை போகும் பறவைகளுக்கு காலில்வளையம் பொருத்தியும், நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களுக்கு 'ஐசி சிப்' பொருத்தியும் அவற்றைக் கண்காணித்தனர்.காளைகளின் தலையில் மாலை, துண்டு,மணி,நெற்றிப்பொட்டு இவற்றுடன் 'ஜிபிஎஸ் கருவி'யும் அலங்கரிக்கத் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X