நடிகை நிலானி ஆண் நண்பர் தீ குளித்து தற்கொலை முயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை நிலானி ஆண் நண்பர் தீ குளித்து தற்கொலை முயற்சி

Added : செப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

- நமது நிருபர் -'டிவி' நடிகை நிலானியின் ஆண் நண்பர், தீ குளித்து தற்கொலைக்கு முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, வளசரவாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவள், நிலானி, 36. இவள், தென்றல் என்ற, 'டிவி சீரியல்' மூலம், நடிகையாக அறிமுகமானாள். சினிமாவில் நடிகையாக முயற்சித்தாள்; ஆனால், வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால், தன்னை பிரபலமாக்க, தமிழ் இன, 'போர்வையாளர்'களுடன் இணைந்து, பல போராட்டங்களில் பங்கேற்றாள்.துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக, படப்பிடிப்பு தளத்தில் போலீஸ் உடையில் இருந்த நிலானி, போலீசாரை அவதுாறாக பேசிய, 'வீடியோ'வை, சமூக வலைதளங்களில் வெளியிட்டாள்.அவள் எதிர்பார்த்தது போல, தமிழ் இன போர்வையாளர்கள், அந்த வீடியோ பதிவை, பலருக்கும் அனுப்பி, நிலானியை பிரபலமாக்கினர். இதையடுத்து, வடபழனி போலீசார், ஐந்து பிரிவுகளில், நிலானி மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், 'நான் பிரபலமாக வேண்டும் என்பதற்காக தான், அந்த வீடியோவை வெளியிட்டேன். இதன் மூலம், படவாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்தேன்' என, நிலானி தெரிவித்தாள்தற்போது நிலானி, ஜாமினில் வெளியே வந்து, 'டிவி' சீரியல்களில் நடித்து வருகிறாள்.கணவரை பிரிந்து வாழும் நிலானியிடம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, காந்தி லலித் குமார், 33, என்பவர், நட்புடன் பழகி வந்தார். மேலும் அவர், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, நிலானியை வற்புறுத்தி உள்ளார்.நேற்று முன்தினம், மயிலாப்பூர், முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவில் நடந்த படப்படிப்பு ஒன்றில், நிலானி பங்கேற்றாள். அப்போது, மொபைல் போனில் தொடர்பு கொண்ட காந்தி லலித் குமார், தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், படப்பிடிப்பு நடக்கும் இடத்தில், தீ குளிப்பதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்ய, காந்தி லலித் குமார் வற்புறுத்துவதாக, மயிலாப்பூர் காவல் நிலையத்தில், நிலானி புகார் அளித்தாள். அதன் பின், இருவரும் பேசி, சமரசம் செய்து கொண்டனர்.இந்நிலையில், நேற்று மதியம், கே.கே.நகர், ராஜமன்னார் சாலையில், தனியார் பள்ளி அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த, காந்தி லலித் குமார், கையில் இருந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றி, தீ குளித்தார்.அக்கம்பக்கத்தில் இருந்தோர், அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் மூலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காந்தி லலித் குமார் தீக்குளித்தது தொடர்பாக, கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nandaindia - Vadodara,இந்தியா
17-செப்-201816:58:30 IST Report Abuse
nandaindia இவளை போன்ற குப்பைகளை சுத்தம் செய்யாமல் அரசாங்கம் இன்னமும் தெருவில் விட்டு வைத்திருப்பது ஏன்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X