ஆழ்துளை குழாய்கள் சீரமைத்து பயன்பாட்டிற்கு வர கணக்கெடுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆழ்துளை குழாய்கள் சீரமைத்து பயன்பாட்டிற்கு வர கணக்கெடுப்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;வறட்சியை சமாளிக்க பழுதான ஆழ்துளை குழாய்கள் சீரமைத்து தண்ணீர் வழங்க கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பெய்யாததால் அனைத்து ஒன்றியங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் காமராஜர் அணை வறண்டுள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கினாலும் வினியோகத்தில் நிலவும் குளறுபடியால் தட்டுப்பாடு தொடர்கிறது. ஊராட்சிகளில் குடிநீர் வழங்கும் நிலை மோசமாக உள்ளது. உள்ளூர் நீர் ஆதாரங்களான ஆழ்துளை குழாய்கள் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ந்ததால் காட்சிப்பொருளாக உள்ளன.
உள்ளாட்சிகளிலும் வறட்சியால் பயன் இல்லாமல் போன ஆழ்துளை குழாய்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைவால் பயன்பாடு இல்லாமல் போன ஆழ்துளை குழாய்கள் கணக்கெடுக்கவும், 600 அடிமுதல் 700 அடிவரை குழாய் பூமியில் இறக்கப்பட்டுள்ளன. மேலும் சில நுாறு அடி ஆழம் வரை குழாய்கள் இறக்கி தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கவும். ஆழப்படுத்தினால் எத்தனை ஆழ்துளை குழாய்கள் பயன்பாட்டிற்கு வரும் என கணக் கெடுத்து சமர்ப்பிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X