தந்தை கொலை மகன் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை கொலை மகன் கைது

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்Lமது குடித்து வந்து, அடிக்கடி சண்டை போட்ட தந்தையை கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், கல்குறிச்சியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 45; டிரைவர். இவரது மனைவி மணிமேகலை, 40. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.பெரியசாமி மது குடித்து வந்து, அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்வதுண்டு. ஒரு வாரத்திற்கு முன், தகராறு ஏற்பட்டதில், மணிமேகலை, குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில், பெரியசாமி மட்டும் தனியாக இருந்தார். நேற்று காலை, வீட்டில், பெரியசாமி கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில், பெரியசாமிக்கு அதிக குடிப்பழக்கமும், பெண்களிடம் தகாத உறவு இருந்ததும் தெரிந்தது.இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன், லாரி கிளீனரான அஜித்குமார், 19, நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று, பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிந்தது. அஜித்தை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X