போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓய்வுபெற்ற எஸ்.ஐ., வீட்டில் திருட்டுஆவடி, சேக்காட்டைச் சேர்ந்தவர், விஜயன், 58; ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர். நேற்று முன்தினம், வண்ணாரப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு, குடும்பத்தினருடன் சென்றார். நேற்று அதிகாலை, அவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள், 5 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றது தெரியவந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.--தோழி வீட்டில் திருடிய பெண் கைதுராமாபுரம், வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர், மகேஷ், 26. இவரது மனைவி பவித்ரா, 20. சில வாரங்களுக்கு முன், இவர்களுக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம், காயத்ரி, 22, என்பவள், பவித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அவள் சென்ற பின், 5 சவரன் நகை மாயமானது தெரிய வந்துள்ளது. ராயலா நகர் போலீசார், காயத்ரியை பிடித்து விசாரித்ததில், நகையை திருடி, 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதை, அவள் ஒப்புக் கொண்டாள். போலீசார், அவளை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.-வாலிபரை வெட்டி பணம் பறிப்பு மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர், கலைவாணன், 29. நேற்று முன்தினம் நள்ளிரவு, சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து மாம்பலம் நோக்கி, தண்டவாளத்தின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, இருட்டில் நின்றிருந்த மூவர், கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளனர். தர மறுத்த அவரை, சரமாரியாக வெட்டிய மர்மநபர்கள், 6,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவற்றை பறித்து தப்பினர். மாம்பலம் ரயில்வே போலீசார், கலைவாணனை மீட்டு, ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.-கோவில் உண்டியல் உடைத்து திருட்டுபல்லாவரம் அடுத்த திரிசூலம் அருகே, ஸ்ரீ தேவி திரிசூல நாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, அம்மன் சிலையில் இருந்த, 1 சவரன் செயின், உண்டியலில் இருந்த, 5,000 ரூபாயை திருடி தப்பினர். பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர். வளசரவாக்கம், புத்தர் காலனியில், விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை, சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல், இரண்டு குத்து விளக்குகள் ஆகியவற்றை, மர்மநபர்கள் திருடி தப்பினர். மேலும் சிலை அருகே உறங்கி கொண்டிருந்த சதீஷ், 30, என்பவரின், 3 சவரன் செயினையும், மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.வளசரவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.-மொபைல் திருடிய ஊழியர் கைதுஎழும்பூர் ரயில் நிலையத்தில், நேற்று காலை, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவனிடம், ரயில்வே போலீசார் விசாரித்தனர். அதில், பேரணை ரயில் நிலைய, 'பாயின்ட் மேன்' சிவமூர்த்தி, 30, என்பதும், எக்ஸ்பிரஸ் ரயில் பயணியரின் மொபைல் போன்கள் திருடி வந்ததும் தெரியவந்தது. அவனை கைது செய்த ரயில்வே போலீசார், அவனிடமிருந்து, 10 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X