கொடைக்கானலில் மழை குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் மழை குடிநீர் ஏரிகளில் நீர் மட்டம் உயர்வு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொடைக்கானல்;கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிமற்றும் குடிநீர் தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானலில் சில நாட்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயில், மாலையில் இதமான குளிர் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவியது. சில நாட்களாக காலையில் கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறிகள் காணப்பட்டது. நேற்று காலையில் துவங்கிய தொடர் மழை 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்து நகரை குளிர்வித்தது.
ஏரி நீர்மட்டம் உயர்வு:
இதனால் பழநியின் குடிநீர் ஆதாரமான பிரதான ஏரியின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகின்றது. இதுபோன்று கொடைக்கானல் ஆதாரமான குடிநீர் தேக்கம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட நீர்த்தேக்கமும், புதிய அணையான மனோரத்தினம் சோலை அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன. நீர்மட்டம் உயர்வால் நகருக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி பயணி அமுதா கூறியதாவது: காலையில் நிலவிய மாறுபட்ட சூழலால் மகிழ்ந்தோம். தொடர் மழையால் பல இடங்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X