பரங்கிமலை ரயில் விபத்து போலீஸ் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரங்கிமலை ரயில் விபத்து போலீஸ் விசாரணை

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:பரங்கிமலை ரயில் விபத்து குறித்து, போலீஸ் விசாரணை, இன்று நடத்தப்படுகிறது.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, திருமால்பூருக்கு, ஜூலை, 24ம் தேதி இயக்கப்பட்ட மின்சார ரயில், பரங்கிமலை நிலையத்தில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், ஐந்து பயணியர் இறந்தனர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.தென்பிராந்திய ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தி, சமீபத்தில், முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார். விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு, ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் இழப்பீடும் வழங்கியுள்ளது.இந்த விபத்து குறித்து, போலீஸ் விசாரணைக்கு, ரயில்வே அதிகாரிகளுக்கு, இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் உள்ள, ரயில்வே போலீஸ், டி.எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது. இதில், பரங்கிமலை நிலைய அதிகாரி மற்றும் ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.பயணியர், ரயில் படியில் தொங்காமல் பயணம் செய்ய, தானியங்கி கதவுகள் பொருத்துவது குறித்தும், விசாரணையின் போது, போலீஸ் தரப்பில் வலியுறுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X