ஏ.சி., ப்ரிட்ஜ் கருவியால் ஓசோனுக்கு பாதிப்பு: கருத்தரங்கில் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.சி., ப்ரிட்ஜ் கருவியால் ஓசோனுக்கு பாதிப்பு: கருத்தரங்கில் தகவல்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;'ஏ.சி., ப்ரிட்ஜ், தீயணைப்பு கருவி பயன்படுத்துவதால் 'ஓசோன்' மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது', என பேராசிரியர் தினகரன் பேசினார்.
திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லுாரியில் உலக ஓசோன் தின சிறப்பு கருத்தரங்கு நடந்தது. முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். . இயக்குனர் சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவி விஜயபிரியா வரவேற்றார். பேராசிரியர் தினகரன் பேசியதாவது: ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் தான் முக்கிய காரணம். குளோரோ புளோரோ கார்பன் (சி.எப்.சி.,) எனும் குளிரூட்டி பொருளே ஓசோனை சிதைக்கிறது. வீடுகளில் பயன்படுத்தும் ஏ.சி., ப்ரிட்ஜ், தீயணைப்பு கருவிகளில் கார்பன் குளிரூட்டியாக பயன்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் அகதிகள்: செங்கல்பட்டில் உள்ள தார் தொழிற்சாலைகளால் 13 கிராமங்களே காணாமல் போய்விட்டன. அவர்கள் சுற்றுச்சூழல் அகதிகள் என அழைக்கப்படுகின்றனர்.இந்தியாவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பற்றிய புரிதல் அனைவருக்கும் வேண்டும். பூமி அழியக்கூடிய வாய்ப்பு இல்லை. ஆனால், பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறையும், என பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X