பழநி அரசு, தனியார் பள்ளிகளில்12 மணிநேர சிறப்பு வகுப்புகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி அரசு, தனியார் பள்ளிகளில்12 மணிநேர சிறப்பு வகுப்புகள்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி;பழநிபகுதியில் உள்ள சில தனியார், அரசு பள்ளிகளில் பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு 12மணிநேரம் வரை சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர், அவர்கள் மீது அரசு ஆயக்குடி பயிற்சி மையம் வலியுறுத்தியுள்ளது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் பல ஆண்டுகளாக நடக்கிறது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் முழுவீச்சாக நடத்தப்படுகிறது. பழநியில் உள்ள சில அரசு, தனியார் பள்ளிகளில் காலை 7:00மணிக்கு சென்று மாலை 7:00மணிக்கு மாணவர்கள் வீடுதிரும்பும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி அரசு விடுமுறை நாட்களிலும், பல பண்டிகை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றனர். மாணவர்களை பாடம், மதிப்பெண்களுக்காக 12மணிநேரம் பள்ளியில் வைத்து மனஉளச்சல் ஏற்படுத்துகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட பள்ளிகளை திடீர் ஆய்வு செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் இயக்குனர் ராமமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X