மர்ம பை: ஏர்போர்ட்டில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம பை: ஏர்போர்ட்டில் பரபரப்பு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த மர்ம பைகளால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை பன்னாட்டு விமான முனையத்தின் வருகை பகுதியில், கார்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு, நேற்று பகலில், இரண்டு பைகள், கேட்பாரற்ற நிலையில், வெகுநேரமாக கிடந்தன.அதை பார்த்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயை வைத்து, அந்த பைகளை சோதனை செய்தனர். மேலும், அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், அவசரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.இதையடுத்து, அந்த பைகளை, அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் சாக்லெட்கள், ஒரு புதிய மொபைல்போன் மற்றும் துணிகள் இருந்தன. பயணியர் யாராவது மறதியாக விட்டு சென்றிருக்கலாம் என்ற அடிப்படையில், விமான நிலைய மேலாளரிடம் அந்த பைகள், ஒப்படைக்கப்பட்டன.இந்த சம்பவத்தால், நேற்று பகலில், சென்னை விமான நிலையத்தில், அரை மணி நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X