மானாவாரி நில மேம்பாடு:எட்டு கிராமங்கள் தேர்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி நில மேம்பாடு:எட்டு கிராமங்கள் தேர்வு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை;வடமதுரை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் சார்பில் மானாவாரி நிலங்களை முன்கூட்டியே தயார் செய்வது குறித்து பயிற்சி முகாம் காணப்பாடியில் நடந்தது.உதவி வேளாண்மை அலுவலர்கள் கனகவள்ளி, ராமசந்திரன் முன்னிலை வகித்தனர்.உதவி இயக்குனர் ரவிபாரதி பேசுகையில், மானாவாரி மேம்பாட்டு திட்டத்திற்கு பாடியூர், வேல்வார்கோட்டை, பாகாநத்தம், மோர்பட்டி, கொல்லப்பட்டி, ராமநாதபுரம், காணப்பாடி, சிங்காரக்கோட்டை ஆகிய 8 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மானாவாரி நிலத்தில் கோடை உழவு சரிவின் குறுக்காக செய்வதன் மூலம் மழை நீர் சேமிக்கப்பட்டு வறட்சியில் இருந்து பயிர் காக்கப்படும். மழையை மட்டுமே எதிர்பார்த்து மானாவாரி விவசாயம் நடப்பதால், குறுகிய கால ரகமாகவும், அதிக விளைச்சல் தரக்கூடியதாகவும் பயிர் ரகத்தை தேர்வு செய்ய வேண்டும். அந்தந்த பகுதி மண்வளத்தினையும் விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும். உழவு மானியம், விதைகள் பெற அந்தந்த பகுதி உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X