தென்னையில் ' வெள்ளை ஈ' கட்டுப்படுத்த ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தென்னையில் ' வெள்ளை ஈ' கட்டுப்படுத்த ஆலோசனை

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;தென்னையில் 'ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' தாக்குதலை தடுக்க வேளாண் இணை இயக்குனர் மனோகரன் ஆலோசனை வழங்கினார்.திண்டுக்கல், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம், பழநியில் 29 ஆயிரத்து 560 எக்டேரில் தென்னை சாகுபடியாகிறது. சமீபகாலமாக தென்னையில் 'ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' தாக்குதல் அதிகரித்துள்ளது. தென்னை ஓலையில் அடிப்பாகத்தில் மஞ்சள் நிற நீள்வட்ட முட்டைகளை இடுகிறது. இளம்புழுக்கள் இலைகளின் சாற்றை உறிஞ்சி, ஈக்களாக வெளி வருகிறது. இந்த ஈக்கள் ஏற்படுத்தும் திரவக்கழிவுகளால் 'கேப்னோடியம்'எனும் கரும்பூசணம் படந்திருக்கும். இந்த ஈயை கட்டுப்படுத்த மஞ்சள் நிற பாலித்தீன் ஒட்டுப் பொறிகளை ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் ஆறடி உயரத்தில் தொங்கவிடலாம்.இலை மட்டைகளில் தண்ணீர் தெளிக்கலாம். 'கிரைசோபிட்'இறை விழுங்கிகள் இந்த பூச்சியின் வளர்ச்சி நிலைகளில் நன்கு உட்கொள்வதால், ஈ தாக்கப்பட்ட தோட்டங்களில் எக்டேருக்கு 1,000 எண்ணிக்கையில் விடலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மி.லி., வேப்ப எண்ணெய் கலந்து தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தெளிக்கலாம். மேலும் இதில் ஏற்படும் கரும்பூசணத்தை நிவர்த்தி செய்ய ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா மாவு கரைசலை கலந்து ஓலையின் மேல்பகுதியில் தெளிக்கலாம்,இவ்வாறு இணை இயக்குனர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X