சர்வதேச இளைஞர் திருவிழா: 2,000 பேருக்கு பதக்கங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச இளைஞர் திருவிழா: 2,000 பேருக்கு பதக்கங்கள்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சென்னையில் நடந்த, சர்வதேச இளைஞர் திருவிழாவில், 2,000 பேருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், 1ம் தேதி துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு, 'தினமலர்' நாளிதழ், 'மீடியா பார்ட்னராக' செயல்பட்டது.இந்நிகழ்ச்சியில், விளையாட்டு, கலாசாரம், இசை, பொது விழிப்புணர்வு, கலை, இலக்கியம், நிர்வாகம், தொழில்நுட்பம், தற்காப்பு கலை, கருத்தரங்கம், மாநாடு என, 240 நிகழ்ச்சிகள், 70 இடங்களில், நேற்று வரை நடத்தப்பட்டன.மொத்தம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், இந்த போட்டிகளில் பங்கேற்றனர்.இந்நிலையில், இளைஞர் திறன் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, பெரியமேடு, நேரு உள் விளையாட்டு அரங்கில், நேற்று காலை, 10:00 மணிக்கு துவங்கியது.இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர், விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற, 2,000 இளைஞர்களுக்கு, கோப்பை, விருது மற்றும் பதக்கங்களை வழங்கினர்.கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இதில், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் விருதை, காட்டாங்கொளத்துார், எஸ்.ஆர்.எம்., பல்கலை வென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X