சிறப்பு வகுப்பு கூடாது பள்ளிகளுக்கு உத்தரவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு வகுப்பு கூடாது பள்ளிகளுக்கு உத்தரவு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்;அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது, என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஓய்வு இல்லாததால் மாணவர்கள் மனம், உடல் ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் வந்தபடி உள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்பள்ளி நேரத்துக்கு மிகாமல் வகுப்பு எடுக்க வேண்டும்.
கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்சம்மதத்துடன் சனிக்கிழமை மட்டும் வகுப்பு எடுக்கலாம். அதிக மதிப்பெண் பெறுவதற்காக, அரசு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. மீறி நடத்தினால் ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X