ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்:தேர்தல் நடத்தாததால் அரசு நிதி நிறுத்தம் | Dinamalar

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்:தேர்தல் நடத்தாததால் அரசு நிதி நிறுத்தம்

Added : செப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் மாதந்தோறும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அலுவலர்கள், தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி 2014 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 200 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியில் 170 துப்புரவு தொழிலாளர்கள், 280 ஒப்பந்த தொழிலாளர்கள் என 450 பேர் பணி செய்கின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்வதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாதம் முதல் தேதியில் வழங்க வேண்டிய சம்பளம் 15 ம் தேதி கடந்தும் வழங்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டுக் கடன், கல்விக் கடன் பெற்றவர்கள் நிதி நெருக்கடியால் தவிக்கின்றனர்.
விரைவில் சம்பளம்:கமிஷனர் மனோகர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசின் நிதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநில நிதிக் குழு ஆணையம் வழங்கப்படும் ரூ.1 கோடியில் ரூ.50 லட்சத்தை உலக வங்கி கடனுக்கு ஆணையமே பிடித்தம் செய்துவிடுகிறது.
சில நாட்களில் நிதி வருவதில் தாமதம் ஏற்படுகிறது. குடிநீர், சொத்து வரி உள்ளிட்ட வரிகளை மக்கள் முறையாக செலுத்தாததால் தொடர்ந்து நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் முறையாக வரி செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். துப்பரவு பணியாளர்களுக்கு செப்., 10 ல் ஊதியம் வழங்கப்பட்டு விட்டது. மாநகராட்சி அலுவலர்களுக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும்," என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
17-செப்-201815:29:00 IST Report Abuse
Raj நாங்களா தேர்தல் வேண்டாம் என்று சொல்கிறோம். நீதி மன்றம் தயங்குகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X