சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

- நமது நிருபர் -நெடுஞ்சாலையில் திடீரென அறுந்து விழுந்த மின்கம்பியை அகற்றுவதில், எல்லை பிரச்னையால், வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டியது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.மாதவரம் - பேசின்பாலம் இடையிலான, ஜி.என்.டி., சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது.சென்னை துறைமுகம், தண்டையார்பேட்டை, மணலியில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்லும் டேங்கர் லாரிகள், இச்சாலையில் அதிகளவில் பயணிக்கின்றன.பாரிமுனை செல்லும் மாநகர பேருந்துகள், கார்கள், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் செல்கின்றன.சென்னையில் பல்வேறு இடங்களில், நேற்று பிற்பகல், மழை பெய்தது. இதனால், இருசக்கர வாகனங்களில் வந்தோர், ஆங்காங்கே சாலை ஓரங்களில் இருந்த கடைகளில் ஒதுக்கினர்.காற்றின் வேகம் தாங்காமல், மதியம், 2:45 மணிக்கு, மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில் உள்ள, இரும்பு மின்கம்பத்தில் இருந்து, உயர்அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது.சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இருசக்கர வாகனங்கள் மீது, அந்த மின்கம்பி விழுந்தது. இதுகுறித்து உடனடியாக, மின்வாரிய உயர்அதிகாரிகளுக்கு, மொபைல்போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும், அங்கு மின்வாரிய அதிகாரிகள் வரவில்லை. இதனால், மழைக்கு ஒதுங்கியோர், அச்சத்துடன் இருந்தனர்.மழை நின்றபின், வேறுவழியின்றி, உயிரை பற்றி கவலைப்படாமல், ஒவ்வொருவராக, தங்களது வாகனங்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.எல்லை பிரச்னை காரணமாக, மாதவரம், செம்பியம், மூலக்கடை மின்வாரிய அதிகாரிகள், அங்கு வந்து பணிகள் செய்வதை தவிர்த்தனர் என, ஊழியர்கள் தெரிவித்தனர்.வடசென்னை மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரும், இதை கண்டு கொள்ளவில்லை.மின் கம்பி அறுந்து விழுந்த சம்பவத்தை கூட, அலட்சியமாக கருதிய, மின்வாரியஅதிகாரி களுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X