பெண் உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே, பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாததால் உயிரிழந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம், கீழமருதாந்த நல்லுாரைச் சேர்ந்தவர் வினோத்குமார் மனைவி சூரியகலா, 28. நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்திற்காக, 14ம் தேதி, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மறுநாள், 15ம் தேதி காலை, சூரியகலாவிற்கு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. மதியம், 2.00 மணிக்கு, சூரியகலாவை பொது வார்டுக்கு மாற்றினர். இரவு, சூரியகலாவிற்கு திடீரென ரத்தப்போக்கு அதிகரித்து, உயிரிழந்தார்.ஆத்திரமடைந்த சூரியகலாவின் கணவர் மற்றும் உறவினர்கள், சம்பவத்தின் போது, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லை எனவும், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் தான் சூரியகலா உயிரிழந்தார் எனவும் குற்றம் சாட்டினர். மேலும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரசவ வார்டு முன் அமர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சூரியகலா உடலை வாங்க உறவினர்கள் நேற்று, மறுத்தனர். அதிகாரிகள் பேச்சில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, அவரின் உடலை வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X