பி.எப்., அலுவலகம் திருப்பூரில் அமையுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பி.எப்., அலுவலகம் திருப்பூரில் அமையுமா?

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: 'திருப்பூரில், வருங்கால வைப்பு நிதி - பி.எப்., அலுவலகம் அமைக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு, பின்னலாடை துறையினர் மத்தியில் எழுந்துள்ளது. திருப்பூர் பின்னலாடை ஆலைகளில், ஆறு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில், மூன்று லட்சம் பேர், பி.எப்., பயனாளிகள். ஆனால், திருப்பூர் மாவட்ட, பி.எப்., அலுவலகம், கோவை மண்டலத்துக்கு உட்பட்டு செயல் படுகிறது. பி.எப்., கணக்கிலிருந்து பணம் பெறுவது, பெயர், முகவரி, வங்கி விபரம் மாற்றம் செய்வது போன்ற பி.எப்., சார்ந்த அனைத்து வகை தேவைகளுக்கும், கோவையில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. பின்னலாடை தொழிலாளர்கள் கூறியதாவது:திருப்பூரில், பி.எப்., மண்டல அலுவலகம் இல்லாதது, மிகப்பெரிய குறை. திருப்பூரில், மண்டல அலுவலகம் அமைக்கப்பட்டால், புதிதாக பல நிறுவனங்களை, பி.எப்., வளையத்துக்குள் கொண்டுவர முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X