'அத்திக்கடவு விநாயகர்' வழிபாடு போராட்ட குழுவினர் நூதனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'அத்திக்கடவு விநாயகர்' வழிபாடு போராட்ட குழுவினர் நூதனம்

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற, 'அத்திக்கடவு விநாயகர்' என்ற பெயரில் சிலை வைத்து, வழிபாடு நடத்தப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான, அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதற்காக, பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்த நிலையில், அரசாணை, ஆய்வு என, திட்டப் பணிகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய எல்லையான சின்னசெட்டிபாளையத்தில், அத்திக்கடவு திட்டத்துக்காக, நுாதன முறையில், வழிபாடு நடத்தப்பட்டது. 13ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன், அத்திக்கடவு விநாயகர் சிலை, பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பிரார்த்தனை நிகழ்ச்சி என, மூன்று நாட்களுக்கு பின், நேற்று சிலை விசர்ஜனம் செய்யப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை, அத்திக்கடவு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர், சுப்ரமணியம், 'களஞ்சியம்' விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.போராட்டக் குழுவினர் கூறியதாவது:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்த, தமிழ் புத்தாண்டு தினத்தில் தீர்த்தக்குட வழிபாடு, அமாவாசை சிறப்பு வழிபாடு என, பிரார்த்தனை செய்து வருகிறோம்.விநாயகர் சதுர்த்தியன்று, சிலை வைத்து வழிபாடு நடத்தினோம். அடுத்தாண்டு, அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்பட்டு, குளங்களுக்கு தண்ணீர் வந்து, அதிலேயே, விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, பிரார்த்தனை நடத்தினோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X