பெண்ணுக்கு தொந்தரவு செய்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ., தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணுக்கு தொந்தரவு செய்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ., தற்கொலை

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அடையாறு:வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு தொந்தரவு செய்தது தொடர்பாக, குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையால், ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அடையாறு, கெனால் பேங்க் சாலையைச் சேர்ந்தவர், கலைவாணன், 64; ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவருக்கு, மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர், தன் வீட்டில் வேலை செய்த, 30 வயது பெண்ணை, கடந்தாண்டு ரகசிய திருமணம் செய்துள்ளார். இது, இவருடைய மகன்களுக்கு தெரிந்ததால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கலைவாணனை பிரிந்து சென்ற அந்த பெண், சில மாதங்களுக்கு முன், வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளார்.போரூரில் வசித்த பெண்ணின் வீட்டிற்கு, சமீபத்தில் சென்ற கலைவாணன், அவருக்கு தொந்தரவு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண், நேற்று முன்தினம், கலைவாணன் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டுள்ளார்.இதையடுத்து, கலைவாணனுக்கும், அவரது மனைவி, மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவமானமடைந்த கலைவாணன், நேற்று முன்தினம் நள்ளிரவு, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X