கார் கவிழ்ந்து 2 பேர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கவிழ்ந்து 2 பேர் பலி

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆம்பூர் : ஆம்பூர் அருகே, கார் கவிழ்ந்து இரண்டு பேர் இறந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர், சுபேத் அஹ்மத், 40. இவரது உறவினர், அப்பாஸ் அலி, 23, குடும்பத்தினர், கடந்த மாதம், ஹஜ் யாத்திரை சென்றனர். யாத்திரை முடித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்தனர்.இவர்களை, ஓசூர் அழைத்து வர, இரண்டு, 'ஹோண்டா சிட்டி' கார்களில், உறவினர்கள், சென்னை விமான நிலையம் சென்று, ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.நேற்று காலை, 7:00 மணிக்கு, வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டில், முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை, ஹோண்டா சிட்டி கார் முந்திய போது, தடுமாறி, லாரியின் பின் பக்கம் மோதியது. இதில், அருகில் இருந்த, 15 அடி பள்ளத்தில், கவிழ்ந்தது.சம்பவ இடத்திலேயே, அப்பாஸ் அலி, சுபேத் அஹ்மத் இறந்தனர். படுகாயமடைந்த ஒருவர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X