ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

Added : செப் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஊட்டி - கேத்தி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

ஊட்டி: ஊட்டி - கேத்தி இடையே, மூன்று பெட்டிகளுடன், சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், இரண்டாவது சீசன் துவங்கியுள்ளது. திரளான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், ரயில்வே துறை சார்பில், 'அனைவருக்கும் சுற்றுலா' என்ற பெயரில், ஊட்டி ---- கேத்தி இடையே, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.டீசல் இன்ஜின், மூன்று பெட்டிகள் கொண்ட மலை ரயில், நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊட்டி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. 10.30 மணியளவில் கேத்தி சென்றடைந்தது. கேத்தியில் இருந்து, 11:00க்கு புறப்பட்டு, 11.30மணிக்கு ஊட்டி வந்தடைந்தது.பகல், 2:30க்கு ஊட்டியில் இருந்து, கேத்திக்கும், 3.30க்கு கேத்தியில் இருந்து, ஊட்டிக்கும் ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில், முதல் வகுப்பில், 80, இரண்டாம் வகுப்பில், 40 என, மொத்தம், 120 இருக்கைகள் இருந்தன.ஊட்டி ரயில் நிலைய அதிகாரி, பிரமோத் கூறியதாவது:மலை ரயிலில் பயணிக்க, முதல் வகுப்பு, ஒரு நபருக்கு, 420 ரூபாய், இரண்டாம் வகுப்புக்கு, 300 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சீசன் முடியும் வரை, வாரத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணியர், மகிழ்ச்சியாக, 'செல்பி' எடுத்துக் கொண்டனர். பாலன் என்பவர் கூறுகையில், ''மலை ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கட்டணம் சற்று குறைத்தால், அதிகளவில் சுற்றுலா பயணியர், பயணம் செய்ய முன்வருவர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
17-செப்-201816:53:21 IST Report Abuse
Loganathan Kuttuva நீராவி எஞ்சினை விட டீசல் எஞ்சின் தான் சிறந்தது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X