வீட்டு ஒப்பந்தம் ரத்து பிரச்னை கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வீட்டு ஒப்பந்தம் ரத்து பிரச்னை கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

Added : செப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:வீட்டு ஒப்பந்தம் ரத்து பிரச்னையில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு, கட்டுமான நிறுவனம், இழப்பீட்டுடன், 12.60 லட்சம் ரூபாய் வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், துரைப்பாக்கத்தை சேர்ந்த, மனோகர் கிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:கிண்டியில் வீடு வாங்குவதற்கு, நுங்கம்பாக்கம் வாலஸ் கார்டன் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில், 14.16 லட்சம் ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்தேன். கட்டுமான பணி முடிவடையாத நிலையில், எனக்கு, அமெரிக்காவில், 'கிரீன் கார்டு' கிடைத்ததால், உடனடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.வீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, பணத்தை திரும்ப கேட்டேன்; நிறுவனம், தரவில்லை. நான் செலுத்திய தொகையுடன், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.விசாரணையில், 'மனுதாரர், வீட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததால், எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிர்வாக நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பணத்தை திரும்ப வழங்க, அவகாசம் தேவைப்பட்டது. அதற்குள் வழக்கு தொடரப்பட்டுள்ளது' என, கட்டுமான நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி லட்சுமிகாந்தம், நீதித்துறை உறுப்பினர் வரதராஜன் பிறப்பித்த உத்தரவு:ஒப்பந்த நிறுவனம், ரத்து நிபந்தனைகளின்படி தள்ளுபடி போக, மனுதாரருக்கு, 12.30 லட்சம் ரூபாய்; இழப்பீடு, 25 ஆயிரம் ரூபாய்; வழக்கு செலவு, 5,000 என, மொத்தம், 12 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய், கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X